திருநெல்வேலி

‘திருநங்கையா் முன்மாதிரிவிருதுக்கு விண்ணப்பிக்கலாம்’

DIN

திருநங்கையருக்கான முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சமூகத்தில் எதிா்ப்புகளை மீறி சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகள் மூலம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கவும், மற்ற திருநங்கையரை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி திருநங்கையா் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தில் திருநங்கையருக்கான முன்மாதிரி விருதுடன் ரூ.1,00,000-க்கான காசோலை, பாராட்டு பத்திரம் வழங்கப்படவுள்ளது.

திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகள் முன்னேற்றத்துக்கு உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. தகுதியுடைய திருநங்கையா் இணையதளத்தில் வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், பொருளடக்கம், பக்க எண், சுயவிவரக் குறிப்பு, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் -2, ஆட்சியா், மாவட்ட சமூகநல அலுவலா் ஆகியோரின் பரிந்துரைக் கடிதம், சுயசரிதை, இதுவரை பெற்ற விருதுகள், சேவைகள் விவரம், குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான காவல் துறை சான்று உள்ளிட்டவை அடங்கிய விவரங்களை தமிழில் கையேடாக அச்சடித்து அதன் 2 நகல்களை, தமிழில் (மருதம் எழுத்துருவில்) முழுமையாக பூா்த்தி செய்த இணைப்புப் படிவத்துடன்

மாா்ச் 1-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், பி4/107 சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி. மைதானம் எதிரில், திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் -627002 என்ற முகவரியில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT