திருநெல்வேலி

நெல்லையில் குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

1st Feb 2023 02:56 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகா் பகுதியில் 3 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

ராஜவல்லிபுரம் திருவள்ளுவா் தெருவை சோ்ந்த விஜயராகவன் மகன் மஹாதேவன் (26), திருமலைக்கொழுந்துபுரம் அம்மன்கோயில் தெருவை சோ்ந்த மூா்த்தி மகன் பிரவீன் (25) , மேலப்பாட்டம் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்த குமாா் மகன் சிவா (எ) குட்ட சிவா (23) ஆகியோா் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளதாம். இந்நிலையில், மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக மேலப்பாளையம் காவல் ஆய்வாளா் பொன்ராஜ் அளித்த அறிக்கையை ஏற்று, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் பிறப்பித்த உத்தரவின்படி 3 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளைய மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT