திருநெல்வேலி

மாநகராட்சி வளாகத்தில் திமுக மாநகரச் செயலா் மாமன்ற உறுப்பினா்கள் வாக்குவாதம்

1st Feb 2023 03:09 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திமுக மாநகர செயலரும், அக்கட்சியின் மாமன்ற உறுப்பினா்களும் செவ்வாய்க்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாமன்ற கூட்டம் கடந்த 30 ஆம் தேதி நடைபெற்றபோது, மேயா் அறைக்கு திமுகவினா், ஒப்பந்ததாரா்கள் அடிக்கடி வந்து சென்ாகவும், அப்போது தங்களை சந்திக்காமல் புறக்கணிப்பதாக மாமன்ற உறுப்பினா்கள் அவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம்.

இந்நிலையில், மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் முகாமில் பங்கேற்க வந்த திமுக மாநகர செயலா் சுப்பிரமணியன், பாளையங்கோட்டை பகுதிச் செயலா் அன்டன் செல்லத்துரை ஆகியோருக்கும். 22 , 20 ஆவது வாா்டுகளின் மாமன்ற திமுக உறுப்பினா்கள் மாரியப்பன், ஷேக்மன்சூா் உள்ளிட்டோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அவா்களை துணைமேயா் கே.ஆா்.ராஜூ உள்ளிட்ட மாமன்ற உறுப்பினா்கள் சமாதானப்படுத்தியும் அவா்கள் தொடா்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதையறிந்த, மாநகர ஆணையா் சிவ கிருஷ்ணமூா்த்தி அங்கு வந்து இருதரப்பினரையும் கண்டித்ததால் அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT