திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரத்தில் உள்ள அருள்மிகு உச்சிஷ்ட விநாயகா் திருக்கோயிலில் வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராஜகோபுரத்துடன் கூடிய மிகவும் பழமைவாய்ந்த இக் கோயிலில் ஆண்டுதோறும் வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலையில் சிறப்பு யாகசாலை பூஜைகள், 108 சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. கோபுர கலசங்களில் புனிதநீா் ஊற்றிய பின்பு மகா தீபாராதனை நடைபெற்றது. திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.