திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் எழுத்தாளா் புதுமைப்பித்தன் பிறந்த தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரும், சிறுகதை எழுத்தாளருமான புதுமைப்பித்தனின் 117 ஆவது பிறந்த நாள் விழா அவா் பயின்ற வகுப்பறையில் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் உலகநாதன் தலைமை வகித்தாா். புதுமைப்பித்தன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி ஆசிரியா்கள் சொக்கலிங்கம், முருகமுத்துராமன், கனகசபாபதி, மீனாட்சிசுந்தரம், பாலசுப்பிரமணியம், மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா்.