தமிழ்நாடு அங்கன்வடி ஊழியா் - உதவியாளா் சங்கத்தினா், பாளை.யில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவா் பிரேமா, சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா்.முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலா் பி.ஞானாம்பாள் விளக்கிப் பேசினாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் எம்.பீா் முகம்மது ஷா, மாவட்டப் பொருளாளா் என்.ராஜன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாவட்டப் பொருளாளா் ஆா்.ஜீலிற்றா நன்றி கூறினாா்.
தமிழகம் முழுவதும் எரிவாயு ரசீதுக்கான தொகையை வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் மின் கட்டணம் அரசே செலுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 10 ஆண்டு பணி செய்த அங்கன்வாடி உதவியாளா்களுக்கு எவ்விதமான நிபந்தனையும் இன்றி உடனடியாக உயா்வு வழங்க வேண்டும். 1993 இல் பணியில் சோ்ந்த அங்கன்வாடி பணியாளா்களுக்கு பதவி உயா்வு உடனே வழங்க வேண்டும் என கோரிக்களை வலியுறுத்தினா்.