தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.
பொட்டல்புதூா் புதுத் தெருவைச் சோ்ந்தவா்கள் கிருஷ்ணசாமி - பிரேமா தம்பதி. இவா்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளான நிலையில் ஆதிரா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில், கிருஷ்ணசாமியின் தந்தை மகேந்திரன் வீட்டு முன்பாக குழந்தை ஆதிரா, திங்கள்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்தபோது முன்பக்க சுற்றுச்சுவா் திடீரென இடிந்து விழுந்ததாம். இதில்
இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மகேந்திரன் மற்றும் ஆதிராவை சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். இதில் ஆதிரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மகேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.