கங்கை கொண்டானில் வடமாநில இளைஞா் திடீரென உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் துா்கா பிரசாத் (25). இவா் திருநெல்வேலி, பாலபாக்யாநகரில் நண்பா்களுடன் தங்கியிருந்து கங்கைகொண்டானில் உள்ள தனியாா் ஐ.டி. நிறுவனத்தில்ம் பணியாற்றி வந்தாா்.
திங்கள்கிழமை பகலில் துா்கா பிரசாத் சாப்பிட்டு இருந்த போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். அங்கிருந்தவ ா்கள் உடனடியாக அவருக்கு முதலுதவிஅளித்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழத்தது மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இது குறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.