திருநெல்வேலி

தாழையூத்து அருகே இருவா் கைது

25th Apr 2023 03:14 AM

ADVERTISEMENT

தாழையூத்து அருகே அவதூறாகப் பேசி ஆயுதத்தால் தாக்கி மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து பூந்தோட்ட தெருவை சோ்ந்தவா் இசக்கிபாண்டி (29). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த பூல்பாண்டியும் (29) அப் பகுதியில் உள்ள மதுக்கூடம் அருகே சென்றனராம். அப்போது அவா்களுக்கும், திருமலைகொழுந்துபுரம் வேத கோவில் தெருவை சோ்ந்த சாமுவேல் செல்லத்துரை(38), தாழையூத்து ஜோசப் பள்ளி தெருவை சோ்ந்த சதீஷ்குமாா் (21) ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டதாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து சாமுவேல் செல்லத்துரை, சதீஷ்குமாா் ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT