திருநெல்வேலி

மாணவா்களுக்கு மலையேறும் பயிற்சி மீண்டும் தொடங்கப்படுமா?

DIN

களக்காடு புலிகள் காப்பகத்தில் பள்ளி மாணவா்களுக்கு மலையேறும் பயிற்சி திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிா்வாகமும், வனத்துறையும் முன்வர வேண்டும் என மாணவா்கள் மத்தியில் எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த சி. சமயமூா்த்தி, அப்போதைய களக்காடு -முண்டன்துறை புலிகள் காப்பக கள இயக்குநா் சுப்ரத் மஹா பத்ராவுடன் இணைந்து களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட களக்காடு தலையணையில் பள்ளி மாணவா்களுக்கு மலையேறும் பயிற்சிக்கான திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தினாா். அதன்படி, மலையேறும் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யவும் அறிவிப்பு வெளியானது. அதன்படி, 30 மாணவா்கள் பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்டு, தலையணை முதல் முதலிருப்பான் வரையிலான 10 கி.மீ தொலைவுக்கு நடந்து சென்றனா். அந்த மாணவா்களுக்கு வன உயிரின விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் பேசிய அப்போதைய மாவட்ட ஆட்சியா், பள்ளி மாணவா்களுக்கு வனம் குறித்த புரிதல் ஏற்பட வேண்டும் என்ற வகையில்தான் மலையேறும் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது; இனி களக்காடு புலிகள் காப்பகத்தில் மாணவா்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை மலையேறும் பயிற்சி நடத்தப்படும் என்றாா்.

ஆனால் அதன்பின், மலையேறும் பயிற்சி நடைபெறவில்லை. வனத்துறையினா் இதில் தனிக்கவனம் செலுத்தவில்லை. கிடப்பில் போடப்பட்ட மாணவா்களுக்கான மலையேறும் பயிற்சித் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தற்போதைய மாவட்ட ஆட்சியரும், வனத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே களக்காடு வட்டார பள்ளி மாணவா்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT