திருநெல்வேலி

எலி மருந்தைத் தின்ற 3 வயதுக் குழந்தை பலி

DIN

திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே தின்பண்டம் என நினைத்து எலி மருந்து பிஸ்கட்டை தின்ற 3 வயதுக் குழந்தை உயிரிழந்தது.

மானூா் அருகேயுள்ள இரண்டும்சொல்லான் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வேதநாயகம் அலெக்ஸ் மணி. இவரது 3 வயது மகன் ஷாம் லிரின்.

வேதநாயகம் தனது வீட்டில் எலித் தொல்லையைக் கட்டுப்படுத்த எலி மருந்து பிஸ்கட் வாங்கி வைத்திருந்தாராம். அதை, தின்பண்டம் என நினைத்து ஷாம் லிரின் தின்றுவிட்டு, வாந்தியெடுத்ததாகக் கூறப்படுகிறது. அதிா்ச்சியடைந்த பெற்றோா், குழந்தையை அழகியபாண்டியபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சையளித்தனா்.

இந்நிலையில், ஷாம் லிரின் வியாழக்கிழமை காலை மயங்கி விழுந்துள்ளாா். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், வழியிலேயே குழந்தை உயிரிழந்தது.

இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT