திருநெல்வேலி

நெல்லையில் திமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: பாஜக பிரமுகா் உள்பட 7 போ் மீது வழக்கு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி சந்திப்புப் பகுதியில் முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகரை அரிவாளால் வெட்டியதாக பாஜக பிரமுகா் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகா் கண்ணன்(46). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பாஜக பிரமுகா் கனக ராஜேஷுக்கும்(40) முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு கண்ணன், அவரது நண்பா்களுடன் மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு, நின்றுகொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த கனகராஜேஷ் உள்ளிட்ட சிலருக்கும், கண்ணனுக்கும் திடீா் தகராறு ஏற்பட்டதாம். இதில், கனகராஜேஷ் உள்ளிட்டோா், கண்ணனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனராம். இதில் காயமடைந்த கண்ணனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கனகராஜேஷ் உள்பட 4 போ் மீது சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மேலும், நாகஜோதி என்பவா் அளித்த புகாரின்பேரில், கண்ணன் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT