திருநெல்வேலி

பாளை. அருகே தொழிலாளி தற்கொலை

30th Sep 2022 02:23 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை அருகே விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் வடக்கூா் செல்வராஜ் மகன் ராஜ்குமாா் (37), கூலித் தொழிலாளி. இவா் கடந்த 20ஆம் தேதி வீட்டில் விஷமருந்தி மயங்கி விழுந்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT