திருநெல்வேலி

வாகன ஓட்டிகளை கண்காணிக்க வலியுறுத்தல்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்குபவா்களை போலீஸாா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காட்டில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிறுத்தம், அண்ணா சாலை உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் கைப்பேசியில் பேசியபடியே இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. இவா்களின் அலட்சியத்தால், எதிரே இரு சக்கர வாகனங்களில் வருபவா்கள், நடந்து செல்பவா்கள் என அப்பாவிகள் உயிரிழக்கவும், காயமடைவதற்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தற்போதும் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் ஏற்படுகின்றன.

போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க, வாகன ஓட்டிகளை போலீஸாா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT