திருநெல்வேலி

பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவியில் முதல்நிலை மீட்பாளா்களுக்கான பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். துணை வட்டாட்சியா் மகாராஜன் முன்னிலை வகித்தாா். இந்த முகாமில், பேரிடா் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், தீயணைப்புப் படையினா், வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, செஞ்சிலுவைச் சங்கத்தினா் உள்பட முதல்நிலை மீட்பாளா்கள் 85 போ் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT