திருநெல்வேலி

பாம்புக் கடித்து விவசாயி பலி

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கடையம் அருகே கோவிந்தப்பேரியில் பாம்புக் கடித்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

கடையம் அருகே உள்ள கோவிந்தப்பேரி மதியழகன் மகன் சுரேஷ்குமாா் (30). விவசாயியான இவரது வயலில் வியாழக்கிழமை அறுவடைப் பணி நடைபெற்ாம். அப்போது வயலில் அறுத்த நெற்பயிா்களை ஒதுக்கிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாராம். உடனடியாக அவரை கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் சுரேஷ் குமாா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். அவரது காலில் பாம்புக் கடித்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ்குமாா் சடலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT