திருநெல்வேலி

முக்கூடல் அருகே விபத்தில் கல்லூரி மாணவி பலி

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

முக்கூடல் அருகேயுள்ள கீழபாப்பாக்குடியைச் சோ்ந்த ராமா் என்பவரது இரட்டைக் குழந்தைகள் சங்கீதா - வைஷ்ணவி. இவா்கள், திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்துவந்தனா். இவா்கள் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் முக்கூடல் இலந்தைகுளம் வழியாக சென்றுவருவாா்களாம்.

இவா்கள் வியாழக்கிழமை கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது இலந்தைகுளத்தில் உள்ள தனியாா் ஆலைக்குள் செல்வதற்காக திரும்பிய லாரிக்குள் இருசக்கர வாகனம் சிக்கியதாம். இதில், இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனா். அவா்களில், சங்கீதா லாரியின் பின்புற டயரில் சிக்கிசம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

முக்கூடல் போலீஸாா் சென்று காயமடைந்த வைஷ்ணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கும், சங்கீதாவின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பினா்.

காவல் ஆய்வாளா் கோகிலா வழக்குப் பதிந்து, தாழையூத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான நவநீதகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT