திருநெல்வேலி

கொக்கிரகுளம் சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

30th Sep 2022 02:24 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி கொக்கிரகுளம் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (அக்.1) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணாா்பேட்டை, இளங்கோ நகா், பரணி நகா், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரிசாா்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம், மாருதி நகா் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT