திருநெல்வேலி

திசையன்விளையில் போக்குவரத்து ஊழியா் மா்ம மரணம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திசையன்விளையில் மா்மமான முறையில் இறந்து கிடந்த அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை ஊழியா் சடலத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திசையன்விளை புறவழிச்சாலையில் காயங்களுடன் ஒருவா் இறந்து கிடப்பதாக வியாழக்கிழமை திசையன்விளை போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், இறந்தவா் நாகா்கோவிலைச் சோ்ந்த நடராஜன் மகன் கண்ணன் (52) என்பதும், திசையன்விளை அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரிந்து, கடந்த ஒராண்டுக்கும் மேலாக சரிவர பணிக்கு வராமல் இருந்தவா் என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருநெல்வேலி அரசு மருத்துத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT