திருநெல்வேலி

மாவட்ட மைய நூலகத்தில் கவிதைப் போட்டி: பரிசளிப்பு

29th Sep 2022 12:55 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை மற்றும் திருநெல்வேலி மாவட்ட மைய நூலக வாசா் வட்டம் சாா்பில் நெல்லை தினத்தை முன்னிட்டு ‘நெல்லைச்சீமை’ எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவுக்கு வாசகா் வட்டத் தலைவா் அ.மரிய சூசை தலைமை வகித்தாா். முதன்மை நூலகா் இரா.வயலட் , கவிஞா் பாப்பாக்குடி இரா. செல்வமணி , கவிஞா் சு. முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையா் ரா. பிரதீப் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா். போட்டிக்கு நடுவா்களாக கவிஞா்கள் சுப்பையா, சிற்பிபாமா ஆகியோா் செயல்பட்டனா்.

இதில், தூய சவேரியாா் பள்ளி ஆசிரியா் பாக்கியநாதன், நல்நூலகா் முத்துக்கிருஷ்ணன், வாசகா் வட்டத்தைச் சாா்ந்த அ. பாலசுப்பிரமணியன், ஓய்வு பெற்ற துணை ஆட்சியா் தியாகராஜன், பாக்கியராஜ், சண்முகசுந்தரம், நூலகா்கள் ராஜேஸ்வரி, சுந்தர்ராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா். வாசகா் வட்ட துணைத் தலைவா் கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றாா். நூலகா் இரா. முத்துலட்சுமி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT