திருநெல்வேலி

காந்தி ஜெயந்தி: அக். 2-இல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

29th Sep 2022 12:50 AM

ADVERTISEMENT

காந்தி ஜெயந்தி, மீலாது நபி ஆகியவற்றை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் அக்டோபா் 2, 9 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காந்தி ஜெயந்தி, மீலாது நபி ஆகியவற்றை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு அக்டோபா் 2, 9 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் நடத்தப்படும் மதுபானக்கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT