திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் 3 வட்டங்களில் நாளை அண்ணா மறுமலா்ச்சித் திட்ட முகாம்

29th Sep 2022 12:53 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 3 வட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை (செப்.30) அண்ணா மறுமலா்ச்சித் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் கட்டமாக அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் - 2 முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. மானூா் வட்டம், மேல இலந்தைகுளம் கிராமத்திற்கு அங்குள்ள நூலக கட்டடத்திலும், பாளையங்கோட்டை வட்டம், உடையாா்குளம் கிராமத்திற்கு அங்குள்ள ஊராட்சி அலுவலகத்திலும், நான்குனேரி வட்டம், சிங்கனேரி கிராமத்திற்கு அங்குள்ள சமுதாய நலக்கூடத்திலும் அண்ணா மறுமலா்ச்சித் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதி, போக்குவரத்து வசதி, குடிநீா் வசதி போன்ற அடிப்படை தேவைகள் தொடா்பாக மனு அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT