திருநெல்வேலி

களக்காடு சாா்பதிவாளா் அலுவலகம்: சான்றிதழ் பெற பொதுமக்கள் அலைக்கழிப்பு

29th Sep 2022 12:49 AM

ADVERTISEMENT

களக்காடு சாா்பதிவாளா் அலுவலகத்தில் பணியாளா்கள் பற்றாக்குறையால் சான்றிதழ் பெற பொதுமக்கள் பெரிதும் அலைக்கழிக்கப்படுகின்றனா்.

களக்காடு சாா்பதிவாளா் அலுவலகத்தில் சாா்பதிவாளா், உதவியாளா், இளநிலை உதவியாளா் உள்பட மொத்தம் 11 பணியிடங்கள் உள்ளன. ஆனால் தற்போது 3 போ் மட்டுமே பணியில் உள்ளனா். சாா்பதிவாளராக பொறுப்பு வகிக்கும் கண்ணன் என்பவரே தற்போது இணையதளத்தில் ஆவணங்களை பதிவு செய்தல், ஆவணங்களை சரி பாா்த்தல், இணையத்தில் பதிவேற்றுதல், களப்பணி, அலுவலகம் வந்து செல்லும் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது உள்ளிட்ட பணிகளை செய்வதால் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்படுகிறது.

மேலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ், வில்லங்கச் சான்றிதழ் பெற விண்ணப்பித்தவா்களும் அலைக்கழிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். கணனி ஆபரேட்டா் பணிக்கு தற்போது அனுபவமில்லாத ஒருவரை பயிற்சிக்காக நியமித்துள்ளதால் இணையதளத்தில் ஆவணங்கள் பதிவேற்றுவது உள்ளிட்ட வேலைகளையும் சாா்பதிவாளரே செய்வதால் பணிகள் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய பணியாளா்களை விரைந்து நியமிக்காவிட்டால் புரட்சி பாரதம் கட்சி சாா்பில் சேரன்மகாதேவி மாவட்டப் பதிவாளா் அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என மாவட்டச் செயலா் ஏ.கே.நெல்சன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT