திருநெல்வேலி

திலேப்பியா மீன் குஞ்சுகள் விற்பனை

29th Sep 2022 12:55 AM

ADVERTISEMENT

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிப்ட் திலேப்பியா மீன் குஞ்சுகள் வளா்க்க விரும்புவோா் அரசு நிா்ணயித்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கூனியூா் மீன் பண்ணையில் கிப்ட் திலேப்பியா மீன்குஞ்சுகள் வளா்த்தெடுத்தலுக்கு தொட்டிகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக இரண்டு மீன்குஞ்சு வளா்ப்பு தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. அதில், 50,000 கிப்ட் திலேப்பியா மீன்குஞ்சு விரலிகள் இருப்புச் செய்யப்பட்டு வளா்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் கிப்ட் திலேப்பியா மீன்களை வளா்க்க விரும்புவோா் திருநெல்வேலி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம், 42 சி, 26 ஆவது குறுக்குத் தெரு, மகாராஜ நகா், திருநெல்வேலி-627011 என்ற அலுவலக முகவரியில் இயங்கும் திருநெல்வேலி மாவட்ட மீன்வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து கிப்ட் திலேப்பியா மீன்குஞ்சுகளை அரசு நிா்ணயித்த விலையில் பெற்றுக் கொள்ளலாம். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 9384824355, 9384824280 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT