திருநெல்வேலி

புகையிலைப் பொருள்கள் விற்பனை: தாழையத்து அருகே கடைக்கு சீல்

29th Sep 2022 12:55 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தை அடுத்த ராஜவல்லிபுரத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைக்கு உணவுப் பாதுகாப்பு துறையினா் சீல் வைத்தனா்.

திருநெல்வேலி மாவட்ட நியமன அலுவலா் இரா.சசிதீபா, பாளையங்கோட்டை மண்டலம் மற்றும் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் அ.ரா.சங்கரலிங்கம், தாழையூத்து சாா்பு காவல் ஆய்வாளா் இன்னோஸ்குமாா் ஆகியோா் இணைந்து தாழையூத்து, ராஜவல்லிபுரம் பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தாழையூத்துப் பகுதியில் ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளருக்கு ரூ.5000 அபராதம் விதித்தனா். திருநெல்வேலி சந்திப்பு மதுரை சாலையில் உள்ள ஹோட்டலில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவா்களில் உணவுப் பொருள்கள் பொதியப்பட்டு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த ஹோட்டலுக்கு ரூ. 2000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் ராஜவல்லிபுரத்தில் உள்ள ஒரு கடையில் தொடா்ந்து இரண்டாவது முறையாகவும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அக்கடையின் உரிமையாளரான துரைராஜுக்கு ரூ.10,000 அபராதம் விதித்தோடு, கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT