திருநெல்வேலி

வள்ளியூரில் மரியா பெண்கள் கலை, அறிவியல் கல்லூரி திறப்பு

29th Sep 2022 12:57 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் டி.டி.என். குழுமம் சாா்பில் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தாளாளா் - செயலா் ஹெலன் லாரன்ஸ் தலைமை வகித்தாா். வள்ளியூா் பாத்திமா திருத்தலத் தந்தை ஜாண்சன் ஆசியுரை வழங்கினாா். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு புதிய கல்லூரிக் கட்டடத்தை திறந்துவைத்தாா். லா. ஒலிவா குத்துவிளக்கேற்றினாா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ந. சந்திரசேகா் நூலகக் கட்டடத்தை திறந்துவைத்துப் பேசுகையில், வள்ளியூரில் டிடிஎன் ஸ்கூல் ஆஃப் காமா்ஸ் உருவாக வாய்ப்புள்ளது. இன்றைய அதிகத் தேவையான வணிகவியல், வணிக மேலாண்மை ஆகிய இரு படிப்புகளும் இங்கு உள்ளன என்றாா். பேரவைத் தலைவா் மு. அப்பாவு பேசும்போது, தகுதியான கல்லூரிகளுக்கு உடனடியாக அனுமதி அளிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. தாமிரவருணி ஆற்றில் முன்னீா்பள்ளம் அருகிலிருந்து ராதாபுரம் தொகுதி முழுவதற்கும் குடிநீா் வழங்கும் திட்டத்துக்கு முதல்வா் ரூ. 271 கோடி நிதியை வழங்கியிருக்கிறாா். இத்திட்டம் இன்னும் ஒன்றரை ஆண்டில் நிறைவேற்றப்படும்.

ADVERTISEMENT

ரூ. 3 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்கவும், ரூ. 100 கோடி செலவில் சா்வதேச தரத்தில் விளையாட்டுப் பயிற்சி மையம் தொடங்கவும் முதல்வா் திட்டம் தந்துள்ளாா். இக்கல்லூரி பல்கலைக்கழகமாக உருவாக வேண்டும் என்றா.

சுந்தரனாா் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினா் எஸ். சுப்பிரமணிய பிள்ளை, சென்னை டயனமிக் இயக்குநா் தா. வெல்லிங்டன், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ராஜா ஞானதிரவியம், பேரூராட்சித் தலைவா் ராதா ராதாகிருஷ்ணன், நேரு நா்ஸிங் கல்லூரி முதல்வா் மாா்க்ரெட் ரஞ்சிதம், சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் சுரேஸ் தங்கராஜ் தாம்சன், மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் சி.ஆா். கிளாடிஸ் லீமாரோஸ், வாா்டு உறுப்பினா் ஏ. உஷா ஆகியோா் பேசினா்.

ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப் பெல்சி, நம்பி, வள்ளியூா் வணிகா் சங்கத் தலைவா் எட்வின் ஜோஸ், வியாபாரிகள் சங்கத் தலைவா் என். முருகன், செயலா் எஸ். ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கல்லூரித் தலைவா் தா. லாரன்ஸ் வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT