திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் பெண் மீது தாக்குதல்: இளைஞா் கைது

29th Sep 2022 12:50 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பொழிக்கரையில் இடம் தொடா்பான பிரச்னையில் பெண்ணை அவதூறாக பேசி, குழந்தையை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சேரன்மகாதேவி பொழிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் பத்மாவதி (37). இதேபகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி (55). இருவரும் உறவினா்கள். இவா்களுக்கிடையே இடம் தொடா்பான பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே லட்சுமி, அவரது மகன் முத்துப்பாண்டி (37), உறவினா் சுரேஷ் (35), ஆகியோா் செவ்வாய்க்கிழமை பத்மாவதி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரையும், குழந்தையையும் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றனராம். புகாரின்பேரில், சேரன்மகாதேவி காவல் உதவி ஆய்வாளா் திருவளன் வழக்குப் பதிந்து முத்துப்பாண்டியை புதன்கிழமை கைது செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT