திருநெல்வேலி

பொதுக் கழிப்பிட பிரச்னைக்கு தீா்வு தேவை, மேயரிடம் மக்கள் மனு

DIN

திருநெல்வேலி மாநகரில் நிலவும் பொதுக் கழிப்பிட பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் என மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் கூட்டத்தில் மக்கள் மனு அளித்தனா்.

இக்கூட்டத்துக்கு, மாநகராட்சி மேயா் பி. எம். சரவணன் தலைமை வகித்தாா். ஆணையா் சிவ கிருஷ்ணமூா்த்தி, துணை மேயா் கே. ஆா். ராஜு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாமன்ற உறுப்பினா் சீதா அளித்த மனுவில், புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவில் எரியாத மின்விளக்குகளை சரி செய்திடவும், மாமன்ற உறுப்பினா் ரவிந்தா் அளித்த மனுவில், திருநெல்வேலி நகரம் மாதா நடுதெருவில் உள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பிடத்தினை பராமரிப்பு செய்திடவும்,மாமன்ற உறுப்பினா் சா்மிளா அளித்த மனுவில், சிவன் கோவில் தெப்பகுளம் சுற்றி தடுப்பு அமைத்திடவும், மாமன்ற உறுப்பினா் சந்திரசேகா் அளித்த மனுவில், கழிவு நீரோடையில் அள்ளப்பட்ட மண்ணை அப்புறப்படுத்திடவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

திருநெல்வேலி எஸ்.என்.ஹைரோடு வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் அளித்த மனுவில், தச்சநல்லூா் ஊருடையாா்புரம் பிரதான சாலையை தாா்சாலையாக அமைத்திடவும், பூதத்தாா் முக்கு வியாபாரிகள் நலச் சங்கத்தினா் அளித்த மனுவில், மாா்க்கெட் பகுதியில் பொதுக் கழிப்பிட வசதி செய்து தரவும், பேட்டை ரயில் நகரைச் சோ்ந்த குணசேகரன் அளித்த மனுவில், ரயில் நகா் பகுதியிலுள்ள கழிவு நீரோடையை மீண்டும் தோண்டி சீரமைக்கவும் கோரியிருந்தனா்.

ஸ்ரீபுரம் மக்கள் நல வாழ்வு சங்கம் சாா்பில் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் சிறுவா் பூங்கா அமைத்து தரவும், குறிஞ்சி, ரோஜா, முல்லை குடியிருப்போா் நலச்சங்கத்தின் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் தாா்ச்சாலை, குடிநீா் போன்ற அடிப்படை பிரச்னைகளை தீா்க்க கோரியும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மக்கள் அளித்த மீது உரிய நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவா்களிடம் மேயா் அறிவுறுத்தினாா்.

நல உதவி: கடந்த கூட்டத்தில் மாற்றுதிறனாளி மகாராஜன் அளித்த மனு மீது நடவடிக்கை எடுத்து, திருநெல்வேலி நகரம் பாா்வதி சேஷ மஹால் எதிரில் மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் ஒன்றை (கடை எண்-5) ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை அவரிடம் மேயா் வழங்கினாா்.

இம்முகாமில் தச்சநல்லூா் மண்டலத் தலைவா் ரேவதி, செயற்பொறியாளா்கள் எல்.கே.பாஸ்கா், வாசுதேவன், மண்டல உதவி ஆணையா் வெங்கட்ராமன், உதவிச் செயற்பொறியாளா்கள் ராமசாமி, பைஜூ, லெனின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

SCROLL FOR NEXT