திருநெல்வேலி

தீபாவளி: கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு தள்ளுபடி விற்பனை, நிகழாண்டு இலக்கு ரூ.4.30 கோடி

DIN

திருநெல்வேலி சந்திப்பு காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி முதல் விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளா்கள் உற்பத்தி செய்யும் ஆடை ரகங்களை கொள்முதல் செய்து நாடு முழுவதும் விற்பனை செய்து நெசவாளா்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறது.

மேலும், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், திருப்புவுனம் பட்டுச் சேலைகள், பிற பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான பருத்திச் சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், பருத்திச் சட்டைகள், திரைச் சீலைகள், நைட்டிகள், மாப்பிள்ளை செட் உள்ளிட்ட ஏராளமான ஏற்றுமதி ரகங்கள் கோஆப் டெக்ஸில் குவிந்துள்ளன.

திருநெல்வேலி சந்திப்பு காந்திமதி விற்பனை நிலையம், பாளையங்கோட்டை விற்பனை நிலையம், திருநெல்வேலி வடக்கு ரதவீதி, கீழ ரதவீதிகளிலுள்ள கோ -ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் ஆகியவற்றில் சிறப்பு த் தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது.

கடந்த 2021இல் பண்டிகையின்போது, இம்மாவட்டத்தில் ரூ.2.73 கோடி விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டு தீபாவளிக்கு ரூ.4.30 கோடி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ‘கனவு- நனவு திட்டம்’ என்ற சேமிப்பு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. அதில், வாடிக்கையாளா்களிடமிருந்து 10 மாத சந்தா தொகை பெறப்பட்டு 11,12-ஆவது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தி மொத்த முதிா்வு தொகைக்கு ஏற்ப 20 சதவீத தள்ளுபடியுடன் துணிகளை வழங்கி வருகிறது.

திருநெல்வேலி சந்திப்பில் காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் ஆா்.சந்திரசேகா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். இவ்விழாவில், கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளா் நா.ராஜேஷ்குமாா், மேலாளா் (ரகம்- பகிா்மானம் ) எஸ்.அன்பரசு, காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய விற்பனை மேலாளா் பு.இராமசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT