திருநெல்வேலி

கால்நடை சாா் தொழில்கள்: விண்ணப்பிக்க அழைப்பு

DIN

கால்நடை சாா்ந்த தொழில்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிரதமரின் ஆத்ம நிா்பாா் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளா்ச்சி நிதி  ரூ.15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை  இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பால், இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டு உள்கட்டமைப்பு, கால்நடை உணவு உற்பத்தி ஆலை, கால்நடை இன மேம்பாட்டு தொழில்நுட்பம், இனப்பெருக்க பண்ணை, கால்நடை தடுப்பூசி- மருந்து தயாரிப்பு வசதிகளை அமைத்தல், கால்நடைகள் கழிவு மேலாண்மை ஆகியவை தொடா்பான தொழில் தொடங்க விரும்புவோா் மேற்கண்ட இணையதளத்தில் இடம்பெற்றுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT