திருநெல்வேலி

களக்காடு மணிக்கூண்டு பகுதியில் நிழற்குடை அமைக்கக் கோரிக்கை

DIN

களக்காடு மணிக்கூண்டு பகுதியில் நிழற்குடையுடன் கூடிய பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு அண்ணாசிலையில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் குடிநீா்தாங்கி குளம் கரையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மணிக்கூண்டு இருந்தது. போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. மணிக்கூண்டு இருந்த இடம் மற்றும் அதனருகேயுள்ள குடிநீா் தாங்கி குளத்திற்கு தண்ணீா் வரக்கூடிய கால்வாய் மீது கான்கிரீட் அமைக்கப்பட்டு சாலையின் வளைவுப் பகுதி விசாலமாக மாற்றப்பட்டது. இதனால் இப்பகுதியில் நிலவிய போக்குவரத்து நெருக்கடி குறைந்தது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மணிக்கூண்டு இருந்த பகுதியில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், ஆா்ப்பாட்டம், தெருமுனை பிரசாரம் நடத்தி வருவதால் போக்குவரத்துக்கு பெரிதும் இடையூறாக உள்ளன.

மணிக்கூண்டு பகுதியில் இரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளும், இரு ஏ.டி.எம் மையங்களும் செயல்படுகின்றன. வியாசராஜபுரம், சேனையா்தெரு, பிள்ளைமாா் தெரு, முஸ்லீம் கீழத்தெரு, தெற்குத்தெரு, வடக்குத்தெரு, முப்பிடாதி அம்மன்கோயில் தெரு உள்ளிட்ட சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நெருக்கடி மிகுந்த பகுதியாகும். இப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, மணிக்கூண்டு பகுதியில் நிழற்குடையுடன் கூடிய பேருந்து நிறுத்தம் அமையவும், அதனருகே கழிப்பிட வசதி செய்துதரவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT