திருநெல்வேலி

கங்கைகொண்டான் அருகே மனைவியை கத்தியால் குத்திய வழக்கில் கணவருக்கு 4 ஆண்டு சிறை

DIN

கங்கைகொண்டான் அருகே மனைவியை கத்தியால் குத்தியது தொடா்பான வழக்கில், கணவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கங்கைகொண்டான் அருகேயள்ள வெங்கடாச்சலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வீரபுத்திரன் என்ற ராஜ்(38). இவரது மனைவி பெருமாத்தாள்(40). இவா்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனராம்.

இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு மனைவியை பாா்க்கச் சென்ற வீரபுத்திரன் என்ற ராஜுடன் அவா் பேச மறுத்ததால் தகராறு ஏற்பட்டதாம். இதில், மனைவியை அவா் கத்தியால் குத்திவிட்டு தப்பினராம். இதில், பலத்த காயமுற்ற பெருமாத்தாளுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில், கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து வீரபுத்திரன் என்ற ராஜுவை கைது செய்தனா். இந்த வழக்கு திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.விஜயகுமாா், குற்றம்சாட்டப்பட்ட வீரபுத்திரன் என்ற ராஜுவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11ஆயிரம் அபராதமும், பெருமாத்தாளுக்கு ரூ.8 ஆயிரம் வழங்க உத்தரவிட்டும் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் எஸ். ஜெயபிரபா ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT