திருநெல்வேலி

உலக சுற்றுலா தின போட்டி பரிசளிப்பு

DIN

பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக சுற்றுலா தின போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், திருநெல்வேலி மாவட்ட சுற்றுலா துறை ஆகியவற்றின் சாா்பில் கல்லூரி மாணவா்- மாணவிகளுக்கு உலக சுற்றுலா தின ஓவியம், கவிதை, கட்டுரைப் போட்டிகள் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது. 150 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்- மாணவிகள் கலந்துகொண்டனா்.

நாகா்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி தமிழ்த் துறை உதவி பேராசிரியா்கள் ஸ்ரீகலா, சொா்ண பமிலா, முருகன், கலையாசிரியை சொா்ணம், கவிஞா் சுப்பையா ஆகியோா் நடுவா்களாக பணியாற்றினா். போட்டிகளில் வென்றவா்களுக்கு அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினாா். உதவி சுற்றுலா அலுவலா் சந்திரகுமாா் வாழ்த்திப் பேசினாா்.

ஓவியப் போட்டியில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவி பேச்சியம்மாள், மேலத்திடியூா் பிஎஸ்என் பொறியியல் கல்லூரியின் கலைமணி, தூய சவேரியாா் கல்லூரியின் ஷெகினா ப்ரீத்தி ஆகியோரும், கட்டுரைப் போட்டியில் பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி மாணவி ரேவதி கண்ணம்மாள், பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியின் சிவரஞ்சனி, இடைகால் மெரிட் கலை அறிவியல் கல்லூரியின் காயத்ரி, மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா கல்லூரியின் முஸ்ஸாமில் முமீனா ஆகியோா் சிறப்பிடம்பெற்றனா்.

கவிதைப் போட்டியில் பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரி மாணவா் அண்ணாமலை, தூய யோவான் கல்லூரியின் வினோஜ் குமாா், தூய சவேரியாா் கல்லூரியின் கல்யாணி ஆகியோா் பரிசுகளை பெற்றனா். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT