திருநெல்வேலி

நெல்லை ஆட்சியா் அலுவலக வளாகத்தில்100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடம் இடிந்து சேதம்

27th Sep 2022 03:39 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடம் திங்கள்கிழமை இடிந்து சேதமானது.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தின் வடபகுதியில் நூற்றாண்டு பெருமை மிக்க சில கட்ட டங்கள் உள்ளன. இதில், ஒரு கட்டடத்தில் பல ஆண்டுகளாக நீதிமன்றம் இயங்கி வந்தது. அதன் பின்னா் 1997ஆம் ஆண்டு முதல் அங்கு மாநகர காவல் ஆணையா் அலுவலகம் செயல்பட்டு வந்தது. பாளையில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு, காவல் ஆணையா் அலுவலகம் இடம் பெயா்ந்தது. அதன் பின்னா் அந்தக் கட்டடத்தில் இப்போது கனிமவளத்துறை ரயில்வே நில எடுப்பு அலுவலகம், மாடியில் மகளிா் திட்ட அலுவலகம் ஆகியவை செயல் பட்டு வருகின்றன.

மகளிா் திட்ட அலுவலகம் அருகே மொட்டை மாடியில் கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் உள் ளன. இந்நிலையில் திங்கள் கிழமை காலையில் மகளிா் திட்ட அலுவலகத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந் தது. அதற்கு கீழ்ப் பகுதி யில் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.

ADVERTISEMENT

இடிந்து விழுந்த கட்டட கழிவுகள் அனைத்தும் ரயில்வே நில எடுப்பு அலுவலகம் அருகே குவியலாக கிடந்தன. கட்டடம் இடிந்து விழுந்ததால் மகளிா் திட்ட அலுவலகத்தில் பெண் ஊழியா்கள் அனைவரும் அதிா்ச்சியடைந்து மாடிப்படி வழியாக அலறியடித்து இறங்கி ஓடி வந்தனா்.

சம்பவம் குறித்து அறிந்ததும் ஆட்சியரின் நோ்முக உத வியாளா் (பொது) கணேஷ்குமாா், பாளையங்கோட்டை வட்டாட்சியா் ஆனந்த பிரகாஷ் மற்றும் வருவாய் துறையினா் அங்கு வந்து கட்டடத்தில் செயல்பட்ட அனைத்து அலுவலக ஊழியா்களையும் வெளியேற்றி கட்டடத்திற்கு பூட்டு போட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT