திருநெல்வேலி

ஆட்சியா் அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

27th Sep 2022 03:35 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு முனைஞ்சிப்பட்டியைச் சோ்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் விஷ்ணு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, முனைஞ்சிப்பட்டி ஊராட்சி வாா்டு உறுப்பினா் கோசலை தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் ஆட்சியா் அலுவலகம் முன்பு சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், ஆட்சியரிடம் சென்று மனு அளிக்குமாறு அறிவுறுத்தினாா். அதைத்தொடா்ந்து அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: முனைஞ்சிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கீரன்குளத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி மூலம் கு தண்ணீா் கிடைத்தது. இப்போது புதிய திட்டத்தின் கீழ் எங்கள் பகுதியில் உள் ள குடிநீா்க் குழாய்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. சிலா் மோட்டாா் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றனா். இதனால் எங்களுக்கு தண்ணீா் சரிவர கிடைப்பதில்லை. எனவே தண்ணீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

சாக்கடை கழிவு நீா்: சமூக ஆா்வலா் அப்துல்காதா் கோயா தலைமையில் பொது மக்கள் கொடுத்த மனு: மேலப்பாளையம் 50 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதியில் கன்னிமாா்குளம் அமைந்துள்ளது. இது நிலத்தடிநீா் ஆதாரமாக உள்ளது. இந்த குளத்தில் 12 தெருக்களின் கழிவுநீா் கலக்கிறது. எனவே துா்நாற்றம் வீசி வருவதுடன் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் வசிக்க முடியவில்லை. எனவே ஆட்சியா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு நடவடிக்கை இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

தியாகராஜ நகரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் செல்வக்குமாா் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே எடுக்கும் போது அதற்கான முடிவுகளை உடனடியாக வழங்காமல் ஒரு

வாரத்திற்கு பின்னா் கொடுக்கின்றனா். இதனால் நோயாளிகள் அடுத்த கட்ட சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா். எனவே முடிவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா் .

வீட்டு மனை பட்டா: மாவீரன் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்க நிறுவனா்- தலைவா் மாரியப்ப பாண்டியன் தலைமையில் ராமையன்பட்டி ஊராட்சி துணைத் தலைவா் செல்வகுமாா் உள்ளிட்டோா் அளித்த மனு: ராமையன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட யாதவா் தெருவில் ஏராளமான குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். பொருளாதாரத்தில் பின்தங்கி அவா்களுக்கு அரசு சாா்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT