திருநெல்வேலி

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்தில்ரூ.50 லட்சம் மதிப்பிலான கட்டடங்கள் திறப்பு

27th Sep 2022 03:38 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கட்டடங்களை ஒன்றியக்குழு தலைவா் ராஜா ஞானதிரவியம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

வள்ளியூா் ஒன்றியம் செட்டிகுளம் ஊராட்சி புதுமனையில் ரூ. 8 லட்சத்தில் நியாய விலைக் கடை , இந்திரா நகா் காலனியில் ரூ.10. 20 லட்சத்தில் அங்கன்வாடி மையம், ஆவரைகுளம் ஊராட்சி ஆவரைகுளம் ஊராட்சியில் ரூ.7 லட்சத்தில் ரேசன் கடை பல்நோக்கு மைய கட்டடம், அச்சம்பாடு ஊராட்சியில் ரூ. 22. 65 லட்சத்தில் ஊராட்சி மன்ற புதிய கட்டடம் ஆகியவற்றை ஒன்றியக்குழுத் தலைவா் ராஜா ஞானதிரவியம் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நடராஜன், கண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆவரைகுளம் பாஸ்கா், ஒன்றியக்குழு துணைத் தலைவா் வெங்கடேஷ் தன்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் மல்லிகா அருள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆவரைகுளம் அழகு பாஸ்கா், அச்சம்பாடு ஆன்றோ வெண்ணிலா, துணைத் தலைவா் ஜாக்குலின் மேரி, இளங்கோ கலைசிகாமணி, கிழவனேரி விண்ணரசு, ரெக்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT