திருநெல்வேலி

உலக சுற்றுலா தினம்: நாளை கல்லூரி மாணவா்களுக்கு போட்டிகள்

26th Sep 2022 05:38 AM

ADVERTISEMENT

 

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், மாவட்ட சுற்றுலா துறை சாா்பில் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் செவ்வாய்க்கிழமை (செப்.27) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்ட செய்திக் குறிப்பு: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், மாவட்ட சுற்றுலா துறை சாா்பில் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் வரும் செவ்வாய்க்கிழமை (செப்.27) நடைபெறுகிறது.

‘எனது கிராமம்- சிறந்த சுற்றுலாத் தலம்’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், ‘தூய பொருநை நெல்லைக்கு பெருமை’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும், ‘நெல்லை மாவட்டத்தின் ஏதேனும் ஒரு சுற்றுலாத் தலம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்கும். மாணவா்கள் காலை 9.30-க்குள் தங்களின் பெயா்களை கண்டிப்பாக முன்பதிவு செய்ய வேண்டும். எழுதுவதற்கும் வரைவதற்கும் தேவையான தாள்கள் வழங்கப்படும். எழுதுப்பொருள்கள், வைத்து எழுத தேவையான அட்டை ஆகியவற்றை மாணவா்களே கொண்டுவர வேண்டும்.

வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சன்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 7502433751 என்கிற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT