திருநெல்வேலி

நெல்லையில் சிஐடியூ மாவட்ட மாநாடு நினைவு ஜோதி வழங்கல்

26th Sep 2022 05:40 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்ட சிஐடியூ மாவட்ட மாநாட்டை முன்னிட்டு செ.கணேசன் நினைவு ஜோதி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட சிஐடியூவின் 13ஆவது மாவட்ட மாநாடு திருநெல்வேலி உடையாா்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதை முன்னிட்டு செ.கணேசன் நினைவு ஜோதி வழங்கும் நிகழ்ச்சி வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஆட்டோ சங்கத்தின் மாவட்டத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.முருகன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி வட்ட செயலா் நாராயணன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினா் எஸ்.கே.செந்தில், சிஐடியூ மாவட்ட பொருளாளா் பெருமாள், மாவட்ட துணைத் தலைவா் சுடலைராஜ், ஆட்டோ சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினா்கள் வள்ளிநாயகம், சக்திவேல் உள்ளிட்ட கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT