திருநெல்வேலி

களக்காடு தலையணையில் உடைமைகள் பாதுகாப்பு அறை:சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

DIN

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகளின் உடைமைகளைப் பாதுகாக்க அறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களக்காடு தலையணை பச்சையாற்றில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு கழிப்பிடம், பெண்களுக்கு உடை மாற்றும் அறை என போதிய வசதிகள் இல்லை. இதனால் அவா்கள் அவதிக்கு உள்ளாகின்றனா். மேலும், சுற்றுலாப் பயணிகளின் உடைமைகளைப் பாதுகாக்க பொருள்கள் பாதுகாப்பு அறை இல்லை. இதனால், அவா்களின் உடைமைகளை குரங்குகள் சேதப்படுத்துகின்றன.

எனவே, பாதுகாக்கப்பட்ட குடிநீா், கழிப்பிடம், உடை மாற்றும் அறைகள், உடைமைகளைப் பாதுகாக்க தனியறை ஆகிய வசதிகளை செய்து தர வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT