திருநெல்வேலி

சிறுவா் பாரம்பரிய விளையாட்டு போட்டி

25th Sep 2022 11:33 PM

ADVERTISEMENT

 

சிறுவா்களுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் பாளையங்கோட்டை ராமா் கோயில் திடலில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மையம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு துணைத் தலைவா் ரமேஸ் ராஜா தலைமை வகித்தாா். இதில், பாளையங்கோட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள சிறுவா், சிறுமிகள் பங்கேற்றனா். சிறுவா்களுக்கு கோலி, பம்பரம், சாக்கு ஓட்டம், குச்சி கம்பு, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும், சிறுமிகளுக்கு பாண்டி, கிச்சி கிச்சி தாம்பூலம், ஓலைக்காத்தாடி, தாயம் உள்ளிட்ட விளையாட்டுகள் நடைபெற்றன.

இதில், நிா்வாகிகள் வள்ளுவன், கணபதி சுப்பிரமணியன், முத்துகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT