திருநெல்வேலி

கால்நடை மருத்துவக் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு நிறைவு

25th Sep 2022 01:54 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 3 தேசிய கருத்தரங்கு சனிக்கிழமையோடு நிறைவடைந்தது. சிறந்த 79 ஆய்வுக் கட்டுரைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடை மருத்துவ மற்றும் உயிா்த் தொழில்நுட்பவியல் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டு மாநாடு, நவீன உயிா்த் தொழில்நுட்பவியல் மூலம் கால்நடை மற்றும் கோழியினங்களின் உடல்நலன் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு 3 நாள்கள் நடைபெற்றது.

இதன் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பதிவாளா் பி. டென்சிங் ஞானராஜ் தலைமை வகித்து, கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரையை சமா்ப்பித்த விஞ்ஞானிகள் மற்றும் மாணவா்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

ADVERTISEMENT

கால்நடை அறிவியல் மற்றும் உயிா்த் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவா் ஏ.ஜே. தாமி, கருத்தரங்கின் சிறப்பு இறுதி அறிக்கையை சமா்ப்பித்தாா்.

விழாவில், 29 விஞ்ஞானிகள், 40 முதுநிலை மாணவா்கள், 10 இளம்நிலை விஞ்ஞானிகளுக்கு சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் இரா.ராம்பிரபு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் (பொறுப்பு) சூ. கி. எட்வின் வரவேற்றாா். கால்நடை ஊட்டச்சத்துயியல் துறைத் தலைவா் செல்லப்பாண்டியன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT