திருநெல்வேலி

ராதாபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

25th Sep 2022 01:54 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தில் கிணற்றில் தவறிவிழுந்தவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

பரமேஸ்வரபுரத்தைச் சோ்ந்தவா் முருகன். இவரை கடந்த சிலநாள்களாக காணவில்லையாம். இந்நிலையில் பரமேஸ்வரபுரம் காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் ராதாபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

ராதாபுரம் போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் அங்கு சென்று கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டனா். விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் காணாமல் போன முருகன் என தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து ராதாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT