திருநெல்வேலி

அம்பையில் போக்ஸோ சட்டத்தில் ஒருவா் கைது

25th Sep 2022 01:55 AM

ADVERTISEMENT

 

அம்பாசமுத்திரத்தில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம், சந்தை மடம், முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரத்தினம் (45) என்பவா் வெள்ளிக்கிழமை அதே பகுதியில் உள்ள சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் அடிப்படையில் கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளா் ராஜகுமாரி (பொறுப்பு) விசாரணை மேற்கொண்டு, ரத்தினத்தை சனிக்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT