திருநெல்வேலி

நெல்லையில் சட்ட விரோத மது விற்பனை: 28 போ் கைது

25th Sep 2022 11:33 PM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒரு வாரத்தில் 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் உத்தரவின்பேரில், சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் போலீஸாா் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 28 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், அவா்களிடமிருந்து 267 மது பாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT