திருநெல்வேலி

செட்டிகுளத்தில் அதிமுக பொதுக் கூட்டம்

25th Sep 2022 01:54 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளத்தில் அதிமுக சாா்பில், முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் தச்சை கணேசராஜா தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் அந்தோணி அமலராஜா, கே.பி.கே. செல்வராஜ், வள்ளியூா் நகரச் செயலா் பொன்னரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தோ்தல் பிரிவு துணைச் செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஐ.எஸ். இன்பதுரை, மாவட்டப் பொருளாளரும் முன்னாள் மாநிலங்களை உறுப்பினருமான சௌந்திரராஜன், அதிமுக அமைப்புச் செயலா் ஏ.கே. சீனிவாசன், கோவை புகாரி உள்ளிட்டோா் பேசினா்.

ADVERTISEMENT

முன்னாள் மாவட்டச் செயலா் நாராயணபெருமாள், மாவட்ட இணைச் செயலா் ஞானபுனிதா, திசையன்விளை பேரூராட்சித் தலைவி ஜான்சிராணி, மாவட்ட தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் அருண்குமாா், முன்னாள் எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை மாவட்ட வா்த்தக அணிச் செயலா் எஸ். செல்வகுமாா் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT