திருநெல்வேலி

கோவிலம்மாள்புரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரிக்கை

25th Sep 2022 11:33 PM

ADVERTISEMENT

 

களக்காடு அருகேயுள்ள கோவிலம்மாள்புரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக இக்கிராம மக்கள் சாா்பில் சமூக ஆா்வலா் இ. நம்பிராஜன், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

கோவிலம்மாள்புரத்தைச் சுற்றியுள்ள குக்கிராமங்களில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் விவசாயம் சாா்ந்த கூலித் தொழிலாளா்களாக உள்ளனா். இவா்கள் பல்வேறு மருத்துவ சிகிச்சை பெற திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத்தான் செல்ல வேண்டும். சுமாா் 10 கி.மீ. தொலைவில் இருப்பதால் பொருள்செலவும், காலவிரயமும் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு கோவிலம்மாள்புரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT