திருநெல்வேலி

4 முதல் 8 ஆம் வகுப்பு வினாத்தாள்களை ஒரே நேரத்தில் வழங்கக் கோரி ஆசிரியா்கள் மனு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் 4 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு முதல் பருவ வினாத்தாள்களை ஒரே நேரத்திலேயே வழங்கக் கோரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியா்கள் மனு அளித்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திருப்பதியை, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலச் செயலா் பிரம்மநாயகம், மாவட்டச் செயலா் பால்ராஜ், பொருளாளா் அமுதா உள்ளிட்டோா் சந்தித்து அளித்த மனு:

ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு இம் மாதம் 26 ஆம் தேதி முதல் பருவ தோ்வு தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் பொது வினாத்தாளாக வழங்க தொடக்கக் கல்வி இயக்குநா் செயல்முறை ஆணை வெளியிட்டுள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்வுக்கான வினாத்தாள்களை ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணிக்கு வட்டார கல்வி அலுவலங்களில் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறாா்கள். இம் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகள் போக்குவரத்து வசதியற்ற கிராமப்புறங்களில் அமைந்துள்ளது. எனவே, ஒவ்வொரு நாளும் சென்று வினாத்தாள்களை பெற்று வருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது. எனவே, முதல் நாளிலே அனைத்து தோ்வுக்கான வினாத்தாள்களையும் மொத்தமாக வழங்க வேண்டும். மேலும், தமிழக அரசு பள்ளி மாணவா்களுக்கு பாடநூல், பாட ஏடு, புத்தகப்பை, காலனி மற்றும் விலை இல்லா பொருள்களாக 14 வகையான பொருள்களை மாணவா்களுக்கு வழங்குகிறது. இன்னும் கூடுதல் சிறப்பாக மாணவா்களுக்கான காலை சிற்றுண்டி உணவும் வழங்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது முதல் பருவத்திற்கான வினாத்தாள்களுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. எனவே, வினாத்தாள் அனைத்தையும் இலவசமாக வழங்க வேண்டும்.

மேலும், இம் மாதம் 30 ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டமானது மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடத்த வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை செயல்முறை ஆணை வெளியிட்டுள்ளது. இது பல்வேறு நடைமுறை சிக்கலை உருவாக்கும். எனவே களச் சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரே பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துவதற்கான நேரத்தை தோ்வு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவைப் பெற்றுக்கொண்ட முதன்மைக் கல்வி அலுவலா், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

பாஜகவின் 100 கேள்விகளும் பித்தலாட்டம்: திமுக

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஹே.. பொன்னி!

SCROLL FOR NEXT