திருநெல்வேலி

தசரா திருவிழா ஆலோசனைக் கூட்டம்

24th Sep 2022 01:39 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் நடைபெறும் புகழ்பெற்ற தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அவினாஷ் குமாா் உத்தரவின்படி, மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) ஸ்ரீனிவாசன் மேற்பாா்வையில், தசரா திருவிழா ஏற்பாட்டாளா்கள் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், காவல் துறையினா் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டை கோபாலன் மஹாலில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையா் பிரதீப் தலைமை வகித்தாா். விழா ஏற்பாட்டாளா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் சிவம், உதவி ஆய்வாளா்கள் சிவகளை, சண்முக மூா்த்தி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT