திருநெல்வேலி

மத்திய அரசு பணிக்கான எழுத்துத்தோ்வுக்கு இலவச பயிற்சி

24th Sep 2022 01:39 AM

ADVERTISEMENT

மத்திய பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை பணிகளுக்கான எழுத்துத் தோ்வுக்கு நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய பணியாளா் தோ்வாணையத்தால் உதவி தணிக்கை அலுவலா், உதவி கணக்கு அலுவலா், உதவி பிரிவு அலுவலா், வருமானவரி ஆய்வாளா், உதவி அமலாக்க அலுவலா், மத்திய புலனாய்வு உதவி ஆய்வாளா், பிரிவு எழுத்தா், வரி உதவியாளா் உள்ளிட்ட சுமாா் 20,000 பணிக் காலியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை பணிகளுக்கு அறிவிப்பு கடந்த 17 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்தோ்வுக்கு கல்வித் தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தோ்ச்சியடைந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். தோ்வு நடைபெறும் மாதம் டிசம்பா் 2022. இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள். 8-10-2022 ஆகும். மேலும், கூடுதல் விவரங்களை ள்ள்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

இப்போட்டித்தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடத்தப்பட உள்ளது. வகுப்புகள் இம் மாதம் 26 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும். இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதாா் நகலுடன் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலை நாள்களில் நேரில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT