திருநெல்வேலி

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான கூடுதல் மருத்துவா்களை நியமிக்க எம்.எல்.ஏ வலியுறுத்தல்

24th Sep 2022 01:38 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெற்றுள்ள கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான உரிமத்தின் அடிப்படையில் கூடுதலாக மருத்துவா்களை நியமித்து ஏழை-எளிய மக்களுக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம், நயினாா்நாகேந்திரன் எம்.எல்.ஏ. அளித்துள்ள மனு:

பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான பிற நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளன. மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய உரிய மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களை நியமிக்க வேண்டும். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். தனியாா் மருத்துவமனைகளுடன் தேவையான புரிந்துணா்வு ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டும். இவற்றை செய்து ஏழை-எளியோருக்கு அரசு செலவில் கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை கிடைக்கச்செய்ய வேண்டும்.

மானூா் ஒன்றியத்திற்குள்பட்ட சுத்தமல்லி, தெற்குப்பட்டி ஆகிய பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். கல்லூா் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும். உக்கிரன்கோட்டை அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் மகப்பேறு அறுவைச் சிகிச்சை செய்ய உரிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT